கடந்த 33 நாட்களில் சபரிமலை கோயில் வருவாய் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கடந்த 33 நாட்களில் 128 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டு 80 கோடியே 67 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆண்டு 47 கோடி ரூபாய் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை 128 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் பிரசாதம் மூலம் 24 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.






