வெளிநாட்டு முதலீடு எவ்வளவு? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் – இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
5 முறை வெளிநாட்டு பயணம், முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன? எவ்வளவு முதலீடு வந்துள்ளன? எவ்வளவு தொழில்கள் தொடங்கப்பட்டன? என வெளிப்படையாக சொல்லாதது ஏன்? தமிழ்நாடு முதலீட்டு வழிக்காட்டி நிறுவன இணையத்திலோ தொழில்துறை இணையத்திலோ வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






