தீக்கிரையான இஸ்லாமியர்களின் வீடுகள்! தங்க இடமளித்த இந்துக்கள்!
டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்களின் வீடுகள் எரிந்த நிலையில் அவர்களுக்கு ஹிந்துக்கள் தங்களின் வீடுகளில் பாதுகாப்பளித்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடகிழக்கு டெல்லியின் அசோக் நகரில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு பகுதியில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இஸ்லாமியர்களின் நாற்பது வீடுகளையும், கடைகளையும் எரித்தனர். மதியம் நடந்த தொழுகையின் போதும் 20க்கும் மேற்பட்டோர் மசூதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாகவும் மசூதியை எரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தங்க இடம் இல்லாமல் தவித்த இஸ்லாமியர்களுக்கு அருகில் வசிக்கும் இந்துக்கள் தங்களின் வீடுகளில் பாதுகாப்பு அளித்து உதவியுள்ளனர்.






