--- --:--:-- --

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வெயில்..!

3

மிழகத்தில் இரண்டு தினங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (21-02-2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 

ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 22 முதல் 26ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 –4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (20-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon