--- --:--:-- --

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு..!

1

மின்தடையால் கோவை அன்னூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்துள்ளார்.

 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்ட போது மின்தடை ஏற்பட்டதாகவும் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அங்கு சிகிச்சை பலனின்றி வான்மதி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon