--- --:--:-- --

வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது..!

4

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடி குண்டு வெடிப்பது போல வெடித்து 30 அடிக்கு மேல் நெருப்பு ஜுவாலை உடன் வந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இங்குள்ள மேச்சேரியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பழனிச்சாமி என்பவரின் வீட்டில் பொங்கல் நாளில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். வீடு தீப்பிடித்து எரிந்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த போது உள்ளே யாருமில்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon