மே16, 17 தேதிகளில் விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கம்
கோடை விடுமுறை, முகூர்த்த நாள்கள் வருவதை முன்னிட்டு, வரும் 16, 17 தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மற்றும் மாதவரத்திலிருந்து 16-ம் தேதி மொத்தம் 694 பஸ்களும், 17-ம் தேதி 705 பஸ்களும் இயக்கப்படும். ஆகவே, பயணிகள் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






