நாளை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!
தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக நாளை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தென்மாவட்டங்களில் உள்ள சில இடங்களுக்கு கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பேருந்துகள் நிறுத்தம் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.





