மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. வேலூரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.
சத்துவாச்சாரி, காட்பாடி, அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஸ்மார்ட்சிட்டி பணிகள் காரணமாக பல்வேறு இடங்கள் குண்டும் குழியுமாக இருப்பதால் மழையின்போது பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான விண்ணமங்கலம், ஆலங்குப்பம் சான்றோர் குப்பம், தேவலாபுரம், வெங்கடசமுதிரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது.






