--- --:--:-- --

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை தொடரும்!

2

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை தொடர்வதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய பெருங்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon