--- --:--:-- --

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!

6

மிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தீவிர புயலாக வலுப்பெற்று புயல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவுகிறது.

 

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா, ஒரிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு, வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரையை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும்.

 

தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுப்பெறும். இந்த நிலையில் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Right Menu Icon