பஞ்சு போன்று காணப்படும் ஹார்பி இன கழுகு குஞ்சு
பிரேசிலில் உள்ள பெலாவஸ்டா உயிரியல் மையத்தில் ஹார்வி இன கழுகு குஞ்சுகள் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி பிறந்த இந்த கழுகுக் குஞ்சு பஞ்சு போன்று மெத்தென்று இருப்பது காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக உள்ளது இந்த கழுகு குஞ்சு. இங்கு பிறந்த ஐம்பதாவது ஹார்வு இன கழுகு குஞ்சாகும்.
கம்பீர தோற்றம் கொண்ட இந்த வகை கழுகுகள் உலகின் மிகப்பெரிய கழுகு இனங்களில் ஒன்றாகும். மேலும் இந்தக் கழுகு 10 கிலோ எடை வரை வளரக்கூடியது. பெலாவஸ்டா உயிரியல் மையம் வனவிலங்குகள் தங்களின் இயல்பான வாழ்க்கை முறையில் வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்க மையமாக விளங்குகிறது.







