வேலூரில் இன்று பெய்த ஆலங்கட்டி மழை..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





