--- --:--:-- --

இரட்டை குழந்தைகளை பெற்று விட்டு இறந்த மகப்பேறு டாக்டர்..!

7

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராஜா என்பவரின் மகளான அஞ்சுதா என்பவர் மகப்பேறு மருத்துவர் ஆவார். இவருக்கு பெங்களூருவை சேர்ந்த பல் மருத்துவரான கார்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது.

 

தற்போது மலேசியாவில் மருத்துவராக இருக்கும் கார்த்தி கர்ப்பமடைந்த அஞ்சுதாவை பார்க்க கரம்பக்குடிக்கு திரும்பினார். பிரசவ வலி ஏற்பட்டதை எடுத்து புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அஞ்சுதா அனுமதிக்கப்பட்டார். இதே மருத்துவமனையில் தான் அஞ்சுதாவும் பணிபுரிந்தார்.

 

இதையடுத்து அஞ்சுதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்துபோனார். பலருக்கும் பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் தான் பணிபுரிந்த மருத்துவமனையில் பேருக்காலத்தில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon