--- --:--:-- --

சாதிப் பெயரை நீக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!

1

குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதில் உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளைப் பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய பெயர்கள் எனவும், இவற்றை அவசியம் மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் இந்த பணியை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், சரிபார்க்கப்பட்ட குடியிருப்புகள், சாலைகள், தெருக்களின் பெயர் மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 19ஆம் தேதிக்குள் சாதிப் பெயர் மாற்றம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு கிராம சபையில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் புழக்கத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

Right Menu Icon