டி.வி., ஏசி உள்ளிட்ட 175 பொருட்களின் ஜிஎஸ்டி குறைகிறது..!
ஜிஎஸ்டி அடுக்குகளை குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியையொட்டி ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியையொட்டி ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 4 அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி-யை 2ஆக குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்படி, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என உள்ள அடுக்குகளை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் மட்டும் இருக்கும் வகையில் மாற்றியமைக்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, 4 அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி-யை 2ஆக குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 56ஆவது கூட்டம் தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வரி அடுக்கு அளவுகளைக் குறைப்பது, வரி சீர்திருத்தம், வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கலுக்கான நடைமுறைகளை எளிதாக்குவது ஆகியவை குறித்து ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் டி.வி, ஏ.சி. உள்ளிட்ட 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.






