கிரேட்டா தன்பெர்க் – மலாலா சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்! பிரியங்கா சோப்ரா வரவேற்பு
சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பெர்க் அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மலாலாவை சந்தித்தார். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவரும் தங்களுடைய துறைகள் குறித்து பரஸ்பரமாக விவாதித்தனர்.

அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மலாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.






