பள்ளியில் பயனற்று போகும் அரசின் சலுகை..!
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் காலணிகளை ஒரு விழுக்காடு மாணவர்கள் கூட முழு முறையாக பயன்படுத்த முடியவில்லை என புகார் அளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 1,793 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் காலணிகளை பெறுகின்றனர்.
ஆனால் இதில் பெரும்பாலான மாணவர்கள் அந்த காலணிகளை முறையாக பயன்படுத்துவதில்லை. மாணவர்கள் கட்டாயமாக காலணி அணிந்து வருவதை ஒவ்வொரு பள்ளிகளும் தலைமை ஆசிரியர் உறுதிப்படுத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் காலணிகள் முறையான அளவில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வகுப்பு வாரியாக கடைபிடிக்கப்பட்டு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்ட பொழுது பெரும்பாலான மாணவர்கள் இந்த காலணிகளை பயன்படுத்தவில்லை என்றால் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






