போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை என அரசு எச்சரிக்கை..!
போதை பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் நச்சுப்பொருள், அபின் மற்றும் ஆபத்தான மருந்து பொருட்கள், 5 கிராமுக்கு அதிகமாக போதிய பொருள் வைத்திருந்தாலும் அல்லது அந்த போதை பொருளை விற்பனை செய்தாலோ மரண தண்டனை வரை விதிக்கப்படும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் தற்பொழுது அமலுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
பள்ளி குழந்தைகள் வைத்திருந்தால் அவர்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.





