சோகத்தை மறைக்க முயலும் மீனா..!
கணவர் வித்யாசாகர் புகைப்படத்தின் அருகில் நின்று சற்று சிரித்து சோகத்தை மறைக்க முயலும் நடிகை மீனாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 27ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார். நடிகை மீனாவின் கணவருக்கு நடிகர் ரஜினிகாந்தின் முதல் பல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
மகன் இல்லாததால் நடிகை மீனாவே தனது கணவருக்கு இறுதிச்சடங்கு செய்தார். சென்னையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தற்போது கணவரின் புகைப்படத்தை ஏக்கமாய் பார்க்கும் நடிகை மீனாவின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையான ரசிகர்களும் வேதனை அடைந்துள்ளனர். கலா மாஸ்டர் நடிகை மீனா உடன் இருந்த தேவையான உதவிகளை செய்து வருகிறார்.






