தீபாவளிக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் நவ.1ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ளது.
இந்த பண்டிகையை பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடுவர். இதையொட்டி தீபாவளி நாளான்று அரசு விடுமுறை நாளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு பண்டிகை அன்று மக்கள் பெரியளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
ஒரு நாள் மட்டும் விடுமுறை என்பதால், அடுத்த நாள் உடனடியாக ஊர் திரும்பும்போது மக்கள் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுவர். இதனால் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உட்பட பல்வேறு பிரிவினர் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.






