குளத்தில் உலா வரும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம்..!
திருச்சி திருவெறும்பூர் அருகே கல்லறை குளத்தில் இருக்கும் முதலைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கல்லறைகுளத்தில் வெளியேறும் உள்ளூர், வெளியூர் பகுதி மக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குளத்தில் பத்தடி நீளம் கொண்ட இரண்டு முதலைகள் இருப்பதை கண்ட மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






