கார்ட்டூன் படத்தால் பிரான்ஸுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம்!
முகமது நபியின் கார்ட்டூன்களை காட்சி படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதத்தில் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் நடந்துகொள்வதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்ளும் இமானுவேலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிவிட்டர் மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விவகாரத்தில் பிரான்ஸ் பிரதமர் மனநலம் குன்றியவர் போல் நடந்து கொள்வதாகவும் அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாகவும் துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக துருக்கிக்கான தங்கள் தூதரை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
பிரான்ஸின் இறைதூதர் முகமது நபியின் கார்டூன் படத்தை மாணவர்களுக்கு காட்டி பாடம் நடத்திய ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிகழ்வு பிரான்சில் கடும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் சர்ச்சைக்குரிய படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளன .
இதை பிரான்ஸ் அரசு அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் இமானுவேல் கூறியிருந்தார். இதற்காக பிரான்ஸ் பிரதமருக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பிரான்ஸ் நாட்டு பொருட்களை கடைகளில் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தாங்கள் விட்டுத் தரமாட்டோம் என பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளை தாங்கள் மதிப்பதாகவும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.






