முதியவரின் கல்லீரலில் 1.5 கிலோ கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை சாதனை..!
திருச்சியில் முதியவரின் கல்லூரியில் இருந்து 1.5 கிலோ கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முதியவர் கடுமையான வயிற்று வலியுடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.
அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் கல்லீரலின் மேற்பகுதியில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கல்லீரலில் வலது பக்கத்தில் இருந்த கட்டி 60 சதவீத கழிவுடன் சேர்த்து அகற்றப்பட்டது.
இதயம் வெளியேற்றும் ரத்தத்தில் 25 சதவீதமும் கல்லீரலுக்கு செல்வதால் மிகவும் கவனத்துடன் நவீன கருவியை பயன்படுத்தி அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். பின்னர் 1.5 கிலோ எடை உள்ள கட்டி அகற்றப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





