சிறுமி உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்..!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முதலில் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை காப்பாற்ற முடியாது என்று கூறியதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், விடுமுறையில் இருந்த அரசு மருத்துவர் தீபானந்தன், பணிக்கு வந்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




