தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.பி.மணி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!
திருப்பூர் மாவட்டம் கருவலூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14ம் தேதி) 15 வேலம்பாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.பி.மணி தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கிநார்.

நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் குழு உறுப்பினர் அர்ஜுனன், முன்னாள் பகுதி துணைச் செயலாளர் கே.நடராஜ், 24.வது வார்டு பிரதிநிதி ஆர். ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





