--- --:--:-- --

கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுத்த அரசு மருத்துவர்.!

7

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர் தனக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மருதமுத்து என்பவரது மனைவி ராஜராஜேஸ்வரி. கர்ப்பிணியான இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் நான்கு நாட்களாகியும் சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவர் ஜோதிமணி இருந்துள்ளார் .

 

பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர். அங்கு வயிற்றில் உள்ள குழந்தை இறந்துவிட்டதாக கூறி ஒரு மணி நேரத்திற்கு வயிற்றில் இறந்த நிலையில் இருந்த பெண் சிசுவை வெளியே எடுத்துள்ளனர்.

 

இதனிடையே உடனடியாக சிகிச்சை அளிக்க அரசு மருத்துவரான ஜோதிமணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது தெரியவ!ந்தது. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Right Menu Icon