110 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் |
தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவின்பேரில் மாறுதல் அளிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் மாறுதல் வழங்கப்பட்டுள்ளது, மாறுதல் பயணப்படி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.







