தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, வில்லிவாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, ஆவடியில் மழை பெய்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை காரணமாக கருமலை எஸ்டேட் பாலாஜி கோவில் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட.து சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக 2 மணிநேரம் மழை பெய்தது.







