அரசு பஸ் -லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.ஜி.கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ந்த விபத்தில், படுகாயமடைந்த 20க்கும் அதிகமானோர், அருகிலுள்ள ஹாஸ்பிடல்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.





