ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பருப்பு, பாமாயில் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மே மாதத்திற்கு வழங்குவதற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 418 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.





