--- --:--:-- --

ஒரே நாளில் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை..!

3

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை லட்சத்தை தாண்டியது நகை பிரியர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

 

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியையும் சற்று ஆறுதலையும் கொடுத்துள்ளது.

 

நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570க்கும் சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கும் சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் ரூ.11,980க்கும், சவரனுக்கு ரூ.2,080 குறைந்து ஒரு சவரன் ரூ.95,840க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Right Menu Icon