--- --:--:-- --

பொங்கலுக்கு பிறகு அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

2

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்கிறது. தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் நேற்று பொங்கல் தினத்தன்றும் அதிரடியகா உயர்ந்தது.

 

அதன் படி நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,290க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,050க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ. 88,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.306க்கும், கிலோவுக்கு ரூ.4000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon