தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு என்ற குறளை குறிப்பிட்டுள்ளார்.
அதில் வள்ளுவன் சொன்ன அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற்றல், ஊக்கமளித்தல் ஆகியவை திமுக ஆட்சியின் அடிநாதம் என குறிப்பிட்டுள்ளார். சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சலும், வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்களும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகளும், தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகளும் தமிழ்நாட்டில் தொடரும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.






