ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்ளூர் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. அதன் படி சனிக்கிழமை (நவம்பர் 22) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கும் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கும் சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 90 குறைந்து ஒரு கிராம் ரூ.9,610க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ. 76,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.171க்கும், ஒரு கிலோ ரூ.1,71,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





