தங்கம் ஒரு கிராம் ரூ.15,000 ஐ கடந்தது..!
தங்கத்தின் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் உயர சில முக்கியமான உலகளாவிய காரணங்கள் உள்ளன. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று (ஜனவரி 26) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025 க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,20,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,500க்கும், சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேப்போன்று நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வரும் வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.375க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






