போய் வண்டியை கழுவு..வேலையில் இருந்து தூக்கி விடுவேன் என மிரட்டிய பேராசிரியர்..!
கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறை தலைவராக பணிபுரியும் ரமேஷ் என்பவர் அடாவடியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களை கல்லூரிலுள்ள பணியாளர்களை வைத்து சுத்தம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் அங்கு இயந்திரவியல் துறை தலைவராக பணிபுரியும் ரமேஷ் என்பவர் காரை சுத்தம் செய்ய மறுத்த ஊழியரை பணியை விட்டு நீக்கி விடுவேன் எனக்கூறி அடாவடியில் ஈடுபட்டார்.






