10 லட்சம் கொரொனா நிதியாக வழங்கினார் ஜி.கே வாசன்..!
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாசன் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் தான் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கூறினார்.
மத்திய அரசு தடுப்பூசி மருந்துகள் மற்றும் ஆக்சிசனை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டார் .பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி இது கட்டுப்படுத்த இயலாத காரியமாகும் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.




