ஒன்றரை ஆண்டுகளாக கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி மீட்பு..!
ஹரியானா மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண் மீட்க்கப்பட்டார். பானிபட் நகரில் உள்ள வீடு ஒன்றின் கழிவறையில் இருந்து சத்தம் கேட்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அதிகாரிகள் சென்று பார்த்தபோது அந்த கழிப்பறைக்குள் பெண் ஒருவர் பரிதாபமான நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குடும்ப தகராறில் சிறிய கழிப்பறையில் ஒன்றரை ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்ததால் அந்தப் பெண் நடக்க கூட சக்தியின்றி காணப்பட்டார்.
பெண்ணை மீட்ட அதிகாரிகள் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். தொடர்ந்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.







