செயின் பறிக்க முயன்ற இளைஞரிடம் இருந்து தப்பிக்கும் பெண் : சிசிடிவி காட்சி
மதுரையில் செயின் பறிக்க முயன்ற இளைஞரிடமிருந்து பெண் ஒருவர் தப்பிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரை பாஸ்கர் நகர் பகுதியை சேர்ந்த ஜாக்லின் என்பவர் சில நாட்களுக்கு முன்பு தனது பேத்தியுடன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் ஜாக்குலின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட ஜாக்குலின் அந்த இளைஞரின் கையை தட்டிவிட்டு கூச்சலிட்டு உள்ளார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தியதில் செயின் பறிக்க முயன்ற நபர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





