--- --:--:-- --

அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த ராட்சத மரம்..!

5

கொடைக்கானல் குரங்காடு கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்து மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது. கொடைக்கானல் கிராமத்திற்கு வத்தலகுண்டு பகுதியில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Right Menu Icon