வீட்டை விட்டு வெளியேறினால்…. சுட்டு தள்ளுவோம்!
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் எவ்வித கட்டுப்பாட்டையும் மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களை சுட்டுத்தள்ள இராணுவத்தை அழைக்க போவதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரம் புரியாமல் பலர் வழக்கம்போல சாலைகளில் நடமாடி வாகனங்களில் ஊர் சுற்றுகிறார்கள். இதையடுத்து காவல்துறையை கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ள சந்திரசேகரராவ் அவசியமானால் இராணுவத்தை அழைப்பதாக எச்சரித்துள்ளார்.






