--- --:--:-- --

இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படும் ஜெர்மன் மாணவர்! காரணம் என்ன?

5

சென்னை ஐஐடியில் பயின்றுவரும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜேக்கப் லிண்டன்தால் என்ற மாணவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதால் அவரை வெளியேறுமாறு குடியுரிமை துறை கேட்டுக்கொண்டதாக ஜேக்கப் தரப்பில் கூறப்படுகிறது.

 

இயற்பியல் துறையில் எம்எஸ் படிப்பிற்கான மாணவர் பரிமாற்றம் முறையில் ஜேக்கப் சென்னை ஐஐடியில் ஓராண்டு படிப்பு படித்து வந்தார். குடியுரிமை துறையில் ஆஜரான ஜேக்கப்பிடம் இந்தியாவில் இருப்பதற்கான அவகாசம் முடிந்து விட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் அது குறித்த தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டபோது குடியேற்றம் குறித்தும் போராட்டங்களில் பங்கேற்றது பற்றியும் தன்னிடம் கேட்கப்பட்டதாக ஜேக்கப் கூறினார்.

 

சென்னை ஐஐடி வளாகம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்த CAA வுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட ஜேக்கப் அரசு மற்றும் காவல் துறைக்கு எதிரான கருத்துக்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருந்தார்.

Leave a Reply

Right Menu Icon