மத குருமார்கள் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை..!
கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மத குருமார்கள் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கோவில்கள் தேவாலயங்கள் மசூதிகள் உள்ளிட்ட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் கொரொனா நடைமுறைகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதன்படி தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன்,மதகுருமார்கள் 35க்கும் மேற்பட்டோர் உடன்தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அப்போது வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ளவேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வழிபாடு நேரங்களை குறைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.






