பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்படாது..!
பயணிகள் ரயில் சேவை பாதிக்காது என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பீதியை தவிர்க்குமாறு இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்துகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் முழு ஊரடங்கை அமல்படுத்தாமல் 144 தடை உத்தரவை பிறப்பித்து கட்டுப்பாடுகளை கடமையாக்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பல மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
கட்டுப்பாடுகளால் பீதியடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களுக்கு படையெடுத்து வந்து உள்ளனர். பயணிகள் ரயில் சேவை பாதிக்காது என்றும் பல தொழிலாளர்களுக்கு பீதியை தவிர்க்குமாறும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.






