கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து. புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 1,911 ரூபாய்க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
அதேபோல, டெல்லியில் 1745.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1859 ரூபாயாகவும், மும்பையில் 1698.50 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.





