--- --:--:-- --

மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த கணவன்..!

9

குழந்தைகளின் கண் முன்னே மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் சின்னாளபட்டி ஊராட்சியை சேர்ந்த ரவி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது இரண்டாவது மனைவி அருணா குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் குழந்தைகளுடன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அருணா மீண்டும் கணவன் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். முன்னதாக தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் தனது கணவரும் அவரது முதல் மனைவியும் தான் காரணம் என மனு அளித்து விட்டு சென்றுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த ரவி குழந்தைகள் கண்முன்னே மனைவியை அரிவாளால் வெட்டி முயன்றார். அருணா மற்றும் அதனை தடுக்க முயன்ற சகோதரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon