இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை..!
கொரொனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலமாக செல்லவோ, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு கூறியுள்ளது.
பண்டிகையை அவரவர் வீடுகளில் கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ள சிறிய கோவில்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.







