--- --:--:-- --

ஊரடங்கு அமலில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை முழு பொது முடக்கம்..!

2

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை எந்தவித தளர்வும் இன்றி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

 

கொரொனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை , தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. முழு பொது முடக்கம் உள்ள பகுதிகளில் மளிகை கடை, காய்கறி கடை, பெட்ரோல் பங்குகளுக்கு மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டு பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட்டன.

 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாளை பால், கடைகள் மற்றும் மருந்தகங்கள் தவிர வேறு எந்தவித செயல்பாடுகளுக்கும் அனுமதி இல்லை.

Leave a Reply

Right Menu Icon