--- --:--:-- --

குற்றம் குற்றமே வார இதழின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச பொது, கண், எலும்பு, மகளிர் மருத்துவம் மற்றும் ரத்த தான முகாம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடக்கி வைத்தார்..!

LEO_4193(1)

குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், திருப்பூர் ஆதார் மெடிக்கல் சென்டர், தி ஐ பவுண்டேஷன், ஆதார் ரத்த வங்கி இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவம், கண், எலும்பு, மகளிர் மற்றும் ரத்த தான முகாம் திருப்பூர் சிறுபூலுப்பட்டி, 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள வேல் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

முகாமிற்கு குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழின் நிறுவனர், ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் டாக்டர் மு. சஷ்டி கண்ணதாசன் தலைமை தாங்கினார். முதன்மை ஆசிரியர் திலகா அனைவரையும் வரவேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

 

நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் மாநகராட்சி 25 வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், தி.மு.க நிர்வாகிகள் ராமதாஸ், ராமகிருஷ்ணன், சிட்டி வெங்கடாச்சலம், எம்.எஸ். மணி முன்னாள் கவுன்சிலர் திலகர் நகர் சுப்பு, வேல் நர்சரி பள்ளி தாளாளர் மணி உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முகாமில் ஆதார் மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர். ஃபஹிம் அஹமது, பெண்கள் நல சிறப்பு டாக்டர் எஸ். சுபா, பொது மருத்துவ டாக்டர் ஜெயஸ்ரீ ஆகியோர் கொண்ட குழுவினர் 70 பேருக்கு லேப்ராஸ்கோபி, மூட்டு மாற்று, புற்றுநோய், பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பப்பை பிரச்சனைகள், காது, மூக்கு, தொண்டை உள்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்தனர்.

 

மேலும், தி ஐ பவுண்டேஷன் மக்கள் தொடர்பு அதிகாரி சரவணகுமார் மற்றும் மருத்துவ குழுவினர் கிட்ட பார்வை, தூரப் பார்வை, கண் கட்டி, ஒற்றைத் தலைவலி, நீர் அழுத்தம், விழித்திரை பாதிப்பு உள்பட பல்வேறு கண் நோய்களால் பாதிக்கப்பட்ட 80 பேருக்கு பரிசோதனை செய்தனர். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

 

அதேபோல் ஆதார் மருத்துவமனையின் ரத்த முகாம் சார்பில் 5 பேர் ரத்ததானம் செய்தனர். முகாமில் 180 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டு அதிக சர்க்கரை உள்ளவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது. முடிவில் குற்றம் குற்றமே உதவி ஆசிரியர் டாக்டர் எஸ் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

விழாவினை நம்பிக்கை நமது அமைப்பு நிறுவனர் ரஹீம் தொகுத்து வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை குற்றம் குற்றமே வார இதழ் நிருபர்கள் சஃபியுல்லா, ஜாஸ்மின் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Menu Icon